கண்டக்டர் பலி விவகாரம் தந்தை, மகன் கைது
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தனியார் பஸ் கண்டக்டர் இறந்து கிடந்த வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பாக்கம் காலனியைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் லோகநாதன், 40; இவர், மிட்டாமண்டகப்பட்டு காலனி அருகே 20ம் தேதி காலை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, மிட்டாமண்டகப்பட்டு, பேட்டை வீதியைச் சேர்ந்த டிரைவர் முரளி, 52; அவரது தந்தை செல்வராஜ், 70, ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
குடிபோதையில் லோகநாதன் கரும்புச் சோலையில் மயங்கிக் கிடந்தது தெரியாமல் லாரியை பின்நோக்கி முரளி இயக்கியபோது, லோகநாதன் மீது மோதி இறந்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்த போலீசார், முரளி, செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பாக்கம் காலனியைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் லோகநாதன், 40; இவர், மிட்டாமண்டகப்பட்டு காலனி அருகே 20ம் தேதி காலை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, மிட்டாமண்டகப்பட்டு, பேட்டை வீதியைச் சேர்ந்த டிரைவர் முரளி, 52; அவரது தந்தை செல்வராஜ், 70, ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!