விழுப்புரம் மாவட்டத்தில் 74,253 பேருக்கு தடுப்பூசி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 74 ஆயிரத்து 253 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், தகுதியுள்ளோருக்கு கொரோனா வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.நேற்று மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பள்ளிகள், பஸ், ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் நடந்த முகாம்களில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை முகாம் நடந்தது.முகாம்களில், மாவட்டம் முழுவதும் 74 ஆயிரத்து 253 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!