மனைவி மாயம்: கணவர் புகார்
விழுப்புரம : காணை அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.காணை அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் மனைவி திவ்யா, 32; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 18ம் தேதி முதில் திவ்யாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அசோக் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!