dinamalar telegram
Advertisement

சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்ட மாவட்ட அனைத்து துறைகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு எம்.பி.,க்கள் விழுப்புரம் ரவிக்குமார், ஆரணி விஷ்ணுபிரசாத் தலைமை தாங்கினர். கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.எம்.பி., மூலம் கிராம ஊராட்சியை தேர்வு செய்து அதை மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டும்


என்ற கோட்பாடு அடிப்படையில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.கிராம ஊராட்சியில் தனிநபர் வளர்ச்சி, பொருளாதார சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாகும்.அதன் பேரில், ரவிக்குமார் எம்.பி., மூலம் கடந்த 2019-20ம் ஆண்டு காந்தலவாடி ஊராட்சி, 2020-21ம் ஆண்டு பேராவூர் ஊராட்சி, கடந்தாண்டு முன்னுார் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


விஷ்ணுபிரசாத் எம்.பி., மூலம் கடந்தாண்டு பெரியதச்சூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.இந்த ஊராட்சிகளில் அனைத்து துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைத்து நீடித்த முழு வளர்ச்சி, அனைத்து பணிகளை திட்டமிட்டு குறிப்பிட்ட காலஅளவில் செயல்படுத்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணி புரிய வேண்டும்.ஊராட்சித் தலைவர்கள் பங்களிப்பு மிகவும் தேவையாகும். சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாதிரி கிராமத்தில் அனைத்து நலத்திட்டம், வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு தன்னிறைவு மாதிரி கிராமமாக உருவாக்க முன்வர வேண்டும் என கூட்டத்தில் எம்.பி.,க்களால் அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர் உட்பட அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement