இரும்பு திருடியவர் மீது வழக்கு
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்காவைச் சேர்ந்தவர் சையத்உசேன், 42; இவர், அதே ஊரில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.
நேற்று காலை 7:00 மணிக்கு கடையை திறக்கச் சென்றபோது, ஒருவர் பழைய இரும்பு பொருட்களை சாக்கு பையில் கட்டி எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.உடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் தியாகதுருகம் சந்தைமேட்டைச் சேர்ந்த முருகன் மகன் ஏழுமலை, 20; என தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!