அடையாளம் தெரியாத முதியவர் சாவு
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், புதுச்சேரி பஸ்கள் நிற்கும் இடத்தில் நேற்று மாலை 5:00 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்ற விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!