தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 29,870 ஆக சற்று அதிகரித்துள்ளது : 21,684 பேர் நலம்
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர். 21,684 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 28,561 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 29,870 ஆக சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,54,282 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 29,848 பேர், மற்றும் நைஜீரியா சென்று திரும்பியவர் ஒருவரும் ஆந்திர மாநிலம் 10, தெலங்கானா 5, மேற்குவங்கம் 3, ராஜஸ்தான், பீஹார் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 29,870 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,72,666 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,02,90,114 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 16,884 பேர் ஆண்கள், 12,986 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 17,93,890 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,78,738 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,684 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,48,163 ஆக உயர்ந்துள்ளது.
33 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 21 பேரும் , அரசு மருத்துவமனையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,145 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,520 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 21 ம் தேதி) 7,038 ஆக சற்று குறைந்துள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!