Advertisement

பிப்.,6 ல் திருமணம் செய்யும் ஜோடி மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு

ஓசூர்:ஓசூர் அருகே, பிப்., 6 ல் திருமணம் செய்யும் ஜோடி, இந்தியாவிலேயே முதல்
முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா, சிவலிங்கபுரத்தைசேர்ந்தவர் ராமசாமி மகள் ஜனகநந்தினி, 23. பி.டெக் பட்டதாரியான இவர்,சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; தனது மகள்ஜனகநந்தினிக்கும், சென்னை பெரம்பூரை சேர்ந்த ஐ.ஐ.டி.,யில் புராஜெக்ட்அசோசியேட்டாக பணியாற்றி வரும் பி.டெக் பட்டதாரி தினேஷ், 25,என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க ராமசாமி ஏற்பாடு செய்தார். ஆனால்
அதற்குள் கடந்த ஏப்., மாதம் அவர் உயிரிழந்தார். தனது தந்தை பார்த்துவைத்த மணமகனை மணக்க ஜனகநந்தினி முன்வந்தார்; அதற்கு மணமகன் தினேஷ்சம்மதம் தெரிவித்தார். இதனால் கடந்தாண்டு நவ. 8 ல், சிவலிங்கபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் உயிரிழந்த தனது தந்தை ராமசாமிதலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என, மணமகள் ஜனகநந்தினி ஆசைப்பட்டார்.
இதனால் வரும் பிப்., 6 ல் திருமணம் நடந்த பின், மெட்டாவெர்ஸ் முறையில்திருமண வரவேற்பு நடத்த மணமகன் தினேஷ் முடிவு செய்துள்ளார். மெட்டாவெர்ஸ்என்பது இயற்கை, டிஜிட்டல் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப் படும் மெய்நிகர் உலகம். இதில் நுழைபவர்கள் எல்லாரும் டிஜிட்டல்அவதாரம் எடுப்பார்கள்.
வரும் பிப்., 6 ல், திருமணம் முடிந்த பின், மணமக்கள் இருவரும்லேப்டாப்களை திறந்து லிங்கை ஷேர் செய்த பின், அந்த லிங் மூலம் திருமணவரவேற்பில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டிஜிட்டர் அவதாரமாகபங்கேற்கலாம். ஹேரி பாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ்மாளிகையில் திருமண வரவேற்பு நடக்கும். இதற்கு மணமகளின் தந்தையான மறைந்த ராமசாமியின் டிஜிட்டல் அவதாரம் தலைமை வகிக்கும். மணமக்களின் டிஜிட்டல்அவதாரங்கள் விருந்தினர்களை வரவேற்கும். விருந்தினர்களும் டிஜிட்டல்அவதாரங்களாக வந்து, மணமக்களை ஆசிர்வதிப்பார்கள்.
இந்த டிஜிட்டல் அவதாரத்தில், மணமகள் ஜனகநந்தினி, மணமகன் தினேஷ், மணமகளின் தந்தை ராமசாமி ஆகியோரது டிஜிட்டல் அவதாரம் தத்ரூபமாக அவர்களை போன்றே
வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (11)

  • Gandhi - Chennai,இந்தியா

    போலி கல்யாணம்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஜனகநந்தினி காசு சேர்த்து வையும்மா

  • mannaanthai -

    கொரோனா உபாயத்துல பொண்ணு வீட்டுக்க்காரங்கள்லாம் இப்பதான் கொஞ்சம் கல்யாண செலவை குறைச்சு கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இவுங்க வேற புதுசா மெட்டாவேர்ஸ் அது இதுன்னு ஆரம்பிச்சு இன்னும் பைத்தியம் பிடிக்கவைக்க பார்க்குறாங்க. அர்றே. . . பட்ச்ச முட்டாள் படிச்ச முட்டாள் . . . கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்து பயிறு . . . வான வேடிக்கை இல்லே . . .

  • R Ravikumar - chennai ,இந்தியா

    அந்த தந்தை ஆசிர்வாதம் வேண்டும் என்று நினைத்தது நியாயமான ஆசை .ஆனால் திருமணத்திற்கு வந்த மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் .. அதற்கு ஏதும் லிங்க் இருக்கா என்ன ? லேப்டாப் இல் சாப்பிட முடியுமா ? ஆசீர்வாதம் எப்படி செய்வார்கள் லேப்டாப் கதாபாத்திரமாக வந்து செய்வார்களா ? நண்பர்களை , உறவினர்களை எப்படி சந்தித்து பேசுவார்கள் ? இவர்களின் தாம்ப்பத்திய உறவு எப்படி ? கணிப்பொறி மூலமா ? ( மன்னிக்கவும் ) . திருமணம் என்பது board meeting / சேல்ஸ் மீட்டிங் இல்லை . கூடி வாழ்தல் மனிதனின் இயல்பு . இது போன்ற virtual reality விஷயங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே உதவும் . event planning , party organizer , choreography / prewedding photography planner போல இது புது வகை சம்பாத்தியம் . வேலை இல்ல இளைஞர்கள் இதனை கற்று கொண்டு பணக்கார லூசு களிடம் இருந்து காசு கறக்கலாம் . நன்றி .

  • Dhandapani - Madurai,இந்தியா

    கற்பனை கண் விழித்தவுடன் மறைந்துவிடும், பின் அது நிஜவாழ்க்கையில் நடக்காமல் போனால் கசப்புதான் வரும், இருப்பினும் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" வள்ளுவன் வரி போல வளமாக வாழ மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement