dinamalar telegram
Advertisement

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில் தேரோட்டம்

Share
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி ஆகம விதிகள்படி கோவில் வளாகத்திலேயே, சுவாமிக்கு பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி பொன்மயில் வாகனத்தில் உற்சவம் நடந்தது. கொரோனா தொற்று பரவலால், கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிப்படவில்லை. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்திலேயே விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, சிவசுப்பிரமணிய சுவாமி பெரிய தேரோட்டம் நடந்தது. பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் விசேஷமாக நடக்கும் தேரோட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால், ஆகம விதிகள் படி கோவில் வளாகத்திலேயே எளிமையான முறையில் தேரோட்டம் நடந்தது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, வேடர்பறி உற்சவமும், நாளை பூப்பல்லக்கு உற்சவமும், வரும், 23ல் சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement