ரெய்டு நடந்த வீட்டிற்கு வந்த அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள்
காரிமங்கலம்: காரிமங்கலம், கெரகோட ஹள்ளியிலுள்ள, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடு பட்டனர். காலை முதல் இரவு வரை சோதனை தொடர்ந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் தங்க மணி, வீரமணி, வேலுமணி, சண்முகம் உதயகுமார், ராமச் சந்திரன், கருப்பண்ணன் ஆகி யோர் மாலை, 6:50 மணிக்கு, அங்கு வந்தனர். தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை முடிந்தும், அன்பழகன் வீட்டில் சோதனை தொடர்ந் ததை கண்டித்து, அ.தி.மு.க., தொண்டர்கள், முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், போலீசாரை வெளியேற வலியுறுத்தியும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து, அன்பழகன் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அவர்களை சமாதானப்படுத்தி னர். ஆனால் இரவு, 9:00 மணி வரை மேலும் சோதனை தொடர்ந்ததால், அ.தி.மு.க., தொண்டர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!