சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, சாலையோர இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விக்னேஷ், 20, சரண்ராஜ், 26. இருவரும் கடந்த, 13ல், பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தேவிகாபுரத்துக்கு ?ஹாண்டா பைக்கில் சென்றனர். அங்கு பொருட்களையும், புதிய துணிகளையும் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலை திருப்பத்தில், அங்கிருந்த சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விக்னேஷ், சென்னை அரசு மருத்துவமனையில் சரண்ராஜ் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் உயிரிழந்தனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!