dinamalar telegram
Advertisement

கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

Share
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், குப்பம் வனப்பகுதியில் இருந்து, 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்தன. துருகம், கல்லப்பாடி, மோர்த்தானா பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்றுள்ளன. ஏராளமான ஆடுகளை சிறுத்தைகள் தூக்கி சென்றதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து குடியாத்தம் வனத்துறையினர், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement