dinamalar telegram
Advertisement

பழங்குடி மக்களின் தயாரிப்பு பொருட்களை விற்க மையம்

Share
ஈரோடு: ஈரோடு மலைப்பகுதி பழங்குடி மக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் கூறியதாவது: மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்ட தாளவாடி, பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்கள் உற்பத்தி செய்யும் சேர், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மகளிர் திட்டம், உழவர் கூட்டமைப்பு மூலம் விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் அதிகம் காணப்படும் உன்னிச்செடியில் இருந்து, பழங்குடி மக்கள் தயாரிக்கும் மரத்தால் ஆன சேர், கட்டில், ஊஞ்சல், டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய, ஈரோடு கச்சேரி வீதியில், தாசில்தார் அலுவலகம் அருகே, விற்பனை மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement