கள்ளுக்கு அனுமதி கோரி இன்று சாலை மறியல்
ஈரோடு: தமிழகத்தில் ஜனவரி 21ல் கள் இறக்கப்படும் என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்து இருந்தார். இதற்கு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இன்று ஈரோடு-நாமக்கல்-சேலம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் கள்ளுக்கு அனுமதி கோரி பனங்காட்டு படையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். ஈரோடு மாவட்ட போலீசார் மறியலில் ஈடுபட வரும் நபர்களை முன் கூட்டியே கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!