இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் துவக்கம்
ஈரோடு: ஈரோட்டில், 6.17 கோடி ரூபாயில், இளைஞர் மேம்பாட்டுக்கான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கியது.
ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. எம்.பி.,கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 6.17 கோடி ரூபாய் மதிப்பிலான இளைஞர் நலன் மேம்பாட்டு மைய பணியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 10ல் காணொலி மூலம் முதல்வர், 45.15 கோடி ரூபாயில், 365 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் மாணவர்கள், இளைஞர்கள் பயன் பெறும் வகையில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்படி இங்கு, 6.17 கோடி ரூபாயில் இளைஞர் மேம்பாட்டுக்கான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. மையத்தில் மின்னணு நூலகம், உயர்கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி மையம், வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுக்கான பயிற்சி, தொழில் நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மையம் மூலம், ஈரோட்டை சுற்றியுள்ள ஒரு லட்சம் இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!