dinamalar telegram
Advertisement

மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டு? தி.மு.க., நேர்காணலில் முத்துசாமி தகவல்

Share
ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஈரோடு மாநகராட்சி, 23 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிலையில் மனு தந்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடந்தது. இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கூறியதாவது: மாநகராட்சியில், 60 வார்டுகளுக்கு, 400க்கும் மேற்பட்டோர் மனு தந்துள்ளனர். அவர்களிடம் கட்சிப்பணி, செலவு செய்வதற்கான தகுதி, கல்வி, மக்களுடனான அணுகுமுறை குறித்து கேட்டறிகிறோம். பேரூராட்சிக்கு நாளை நேர்காணல் நடக்கவுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் வார்டுகளை பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே, சில கட்டமாக பேசியுள்ளோம். தலைமை என்ன கூறுகிறதோ, அதற்கேற்ப மீண்டும் உறுதி செய்வோம். முக்கிய வார்டு, முக்கிய நபருக்காக கூட்டணி கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தும், பேசியும் சமாதானம் செய்து தீர்வு காணப்படும். மாநகராட்சியில் தோழமை கட்சிகளுக்கு, வார்டு ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பெண்களுக்கு என, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பணி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement