உயர்மின் கோபுர விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
ஈரோடு: சென்னையில் வரும், 24ல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்த இருந்த காத்திருப்பு போராட்டம், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செய்தி தொடர்பாளர் கவின் கூறியதாவது: உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு, மாத வாடகை, நெடுஞ்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதுபோல ஆதார தொகை வழங்க வேண்டும். போலீசாரை வைத்து சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளை மிரட்டி, விருதுநகர் - திருப்பூர் வரையிலான 765 கே.வி., திட்டப்பணிகள் செய்து வருவதை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான தந்தி சட்டம், 1885ஐ ரத்து செய்ய வேண்டும். அதுபோல, பயிர் இழப்பீடு, நிலத்துக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும், என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரும், 24ல் சென்னை தலைமை செயலகத்துக்கு எதிரே காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவித்தோம். ஒருங்கிணைப்பு பணி நடந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!