dinamalar telegram
Advertisement

கொரோனா பரவல் காரணமாக தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

Share
ஈரோடு: எஸ்.எஸ்.எல்.சி. பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23ல் நடத்த பள்ளி கல்வி துறை திட்டமிட்டு கடந்த ஆறில் வினாத்தாள்களை கொண்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில், 30 மையங்களில், 6,874 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், கொரோனா பரவல் தீவிரம் காரணமாக இத்தேர்வு, 29ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும், 31 வரை பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்து இருந்தது. அதுவரை பள்ளிக்கு மாணவ,மாணவிகள் வர கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிட்டது. நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளி கல்வி துறை, 29ல் நடத்த உத்தேசித்து இருந்த எழுத்து தேர்வை மீண்டும் ஒத்தி வைத்தது. இத்தேர்வு பிப்ரவரி 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement