dinamalar telegram
Advertisement

எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 வயது சிறுமி பலி

Share
வேலூர்: வேலூர் மாவட்டம் பணமடங்கி கிராமத்தில் கடந்த 15ம் தேதி எருது விடும் திருவிழா நடந்தது. அப்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வினோதினி மீது மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பயன் இல்லாமல் வினோதினி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    மாடு முட்டியதால் மாடு பிடி வீரர்கள் பலர் மாடு முட்டி மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர் .அதனால் அவர்கள் குடும்பம் பாதிப்புக்குள்ளாகும் .

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    பாரம்பரிய விளையாட்டு என்றாலும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். இதை விழா அமைப்புகள் கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். ஆனால் சில இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். இத்தகைய செயல் இது போன்ற நிலை ஏற்படும்.

  • mindum vasantham - madurai,இந்தியா

    Kulanthaikalai careful aaka kondu pongal

  • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

    வைரஸ், வைரஸ் நோய் பரவல்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க ஜல்லிக்கட்டு எருது விடும் விழா நடத்தாமல் இருந்திருக்கலாம் ஏதோ கட்டுப்பாடுகள் இல்லாமல் ஏதாவது (மனித) சிறுமி உயிர் பலியில்லாமல் செய்யத்திருக்கலாம்

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

    பெற்றோர்களின் கவன குறைவு

Advertisement