விபத்துகளில் மூவர் பலி
சோழவரம்--இரு சம்பவங்களில் நடந்த, சாலை விபத்துக்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் இறந்தனர்.சோழவரம் அடுத்த, எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன்கள் உதயகுமார், 13, லோகேஸ்வரன், 10, இருவரும், நேற்று முன்தினம் மாலை, பல்சர் பைக்கில் செங்குன்றம் சென்றுவிட்டு, திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தனர்.எடப்பாளையம் அருகே செல்லும்போது, நின்று கொண்டிருந்த லாரியில் பைக் மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து, உதயகுமார் சம்பவ இடத்திலேயும், லோகேஸ்வரன் மருத்துவனைக்கு கொண்டு செல்லும்போதும் இறந்தனர்.மற்றொரு சம்பவம்மாதவரம், தணிகாசலம் நகரை சேர்ந்தவர் பிரசாத், 19. சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர் சங்கர், 19; நண்பர்கள் இருவரும், நேற்று முன்தினம் காலை, ஆந்திர மாநிலத்தில் உள்ள 'கோனே பால்ஸ்' பகுதிக்குச் சென்றுவிட்டு மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் அருகே, லாரி ஒன்றை ஓவர் டேக் செய்யும்போது, முன் சென்ற டிராக்டர் மீது, பைக் மோதி விபத்துகுள்ளானது. இதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சங்கர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேற்கண்ட, இரு விபத்துகள் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!