dinamalar telegram
Advertisement

புதுப்பிக்கப்பட்ட பஸ் நிறுத்தம்

Share
திருவள்ளூர்-திருவள்ளூரில், புதுப்பிக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தை எம்.எல்.ஏ., ராஜேந்திரன் நேற்று திறந்து வைத்தார்.திருவள்ளூர், ஜே.என்.சாலை, தாலுகா அலுவலகம் அருகே சென்னையில் இருந்து, திருவள்ளூர் வழியாக, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதற்கு பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.இந்த பஸ் நிறுத்தம் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்ததால், பயணியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தன் தொகுதி மேம்பாடு நிதி, 2020 -21ம் ஆண்டின்கீழ் பஸ் நிறுத்தம் சீரமைப்பதற்கு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து, பஸ் நிறுத்த நிழற்குடை மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்று பஸ் நிறுத்த நிழற்குடையை திறந்து பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement