திட்டமிட்டு பயிர் செய்தல் வேண்டும்
திருவள்ளூர்-'கோடை காலத்தில் விவசாயிகள் பயன் பெறுவதற்கு இப்போதே திட்டமிட வேண்டும்' என, திருவள்ளூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:வரும் மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் வரை கோடை காலம் என்பதால் விவசாயிகள் நல்ல வருமானம் கிடைக்க இப்போதே திட்டமிட்டு பயிர் செய்தல் மிகவும் அவசியம்.கோடை காலத்தில் வெட்கத்தை தணிக்க மக்கள் ஆர்வம் காட்டும் பழங்கள், தர்ப்பூசணி, முலாம் மற்றும் வெள்ளரி ஆகிய பழம் வகைகள் இயற்கை முறையில் விளைவதாலும், வெப்பத்தை தனிப்பதோடு ஊட்டசத்தாக இருக்கின்றன.மேலும், பழங்களின் சுவையாலும், குளிர்பானங்கள் தயாரிக்க என பல கோணங்களில் இப்பழங்கள் மக்களுக்கு கோடையில் பயன்படுவதால், இப்பயிர்களை தேர்தெடுத்து விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.இதனால், நல்ல வருமானம் கிடைக்கும். இம்மாதத்தில், இப்பயிர் விளைவித்தால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.இப்பயிர்களை விதைப்பதற்கு முன், விதை பரிசோதனை செய்து, தரமான விதைகள் வாங்கி விதைத்து மகசூல் பெற வேண்டும்.தர்ப்பூசணிக்கு, 14 நாட்களில் விதை பரிசோனை முடிவும், வெள்ளரி, முலாம் பழம் ஆகியவற்றிக்கு, எட்டு நாட்களில் விதை பரிசோதனை முடிவும் வழங்கப்படும்.விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையில், 100 கிராம் அளவிற்கு எடுத்து வந்து விதை பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.விதை பரிசோதனைக்கு, ஒரு மாதத்திற்கு, வெறும், 30 ரூபாயாகும். மேலும், தகவலுக்கு மூத்த வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஆயில் மில் அருகில், பெரியகுப்பம், திருவள்ளூர் - 602 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!