நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
திருத்தணி-காவல் நிலையம் எதிரே, நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருத்தணி - கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலை, இந்திரா நகரில் உள்ளது திருத்தணி காவல் நிலையம். இந்நிலையில், காவல் நிலைய எல்லைக்குள் போக்குவரத்து விதிமீறல், விபத்து மற்றும் குற்ற வழக்களில் சிக்கும் வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும் வாகனங்களை போக்குவரத்து இடையூறாக நிறுத்தாமல், மாநில நெடுஞ்சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர்.ஒரு சில வாகனங்கள், பல மாதங்களாக சாலையிலேயே இருப்பதால் அவ்வழியாக செல்லும் பஸ், வேன், கார் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் கடும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலையுள்ளது.மேலும், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளதால், காவல் நிலையத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை காவல் நிலையம் பின்புறமோ அல்லது போக்குவரத்து இடையூறாக இல்லாத இடத்தில் குற்ற வழக்கு வாகனங்கள் நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து திருத்தணி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:காவல் நிலையம் அமைத்துள்ள இடம் குடியிருப்பு பகுதி மற்றும் குறுகிய இடம் என்பதால், குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தி உள்ளோம்.இருப்பினும் எங்கள் உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!