dinamalar telegram
Advertisement

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Share
பொன்னேரி--குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவணம் கிராமத்தில் உள்ள கிராம சீர்திருத்த வாலிபர் சங்கம் மற்றும் அம்பேத்கர் கல்வி நிலையம் சார்பில், நேற்று, சுகாதாரமாக இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது.இதில், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம்; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருந்து கொசுவை ஒழிப்போம்; மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தருவோம் என, கோஷமிட்டபடி சிறுவர்கள், இளைஞர்கள் பேரணியாக வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக பொன்னேரி நகராட்சி ஆணையர் தனலட்சமி பேரணியை தொடங்கி வைத்தார். அவரிடம், கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி, வெளியேற வழியின்றி இருப்பதால், சுகாதாரம் பாதிப்பதாகவும், அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் முறையிட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர், குடியிருப்புவாசிகளிடம் உறுதியளித்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement