dinamalar telegram
Advertisement

ஆரம்ப சுகாதார நிலையம் பாதுகாப்பு கேள்விக்குறி

Share
பொன்னேரி--ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பில் சுற்றுச்சுவர் மற்றும் இரவு நேர காவலர் இல்லாததால், அங்கு பணிபுரிவர்கள், சிகிச்சைக்கு வருபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், 100க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.செவ்வாய்க்கிழமைகளில், கர்ப்பிணிகள் மாதந்திர பரிசோதனை செய்து கொள்ள வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு பகுதி, அரசூர் செல்லும் சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் 'குடி'மகன்கள் சுகாதார நிலைய வளாகத்தின் தரையில் அமர்ந்து குடித்துவிட்டு, மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.இது இரவு நேர பணியில் இருப்பவர்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சுவர், இரவு நேர காவலாளி இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கவும், இரவு நேர காவலாளி நியமிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement