dinamalar telegram
Advertisement

போலீஸ் டைரி

Share
விபத்தில் வங்கி ஊழியர் பலிதிருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையை சேர்ந்தவர் மகிபன், 57. வங்கி ஊழியர். இவர், நேற்று முன்தினம், அரக்கோணத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருடன் சேர்ந்து, கனகம்மாசத்திரம் சென்று குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அத்திப்பட்டு பாலம் அருகே வந்த போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்தவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இறந்தார்.பாம்பு கடித்தவர் பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், அரியப்பாக்கம் கிராமம், திருமலை நகரில் வசித்து வருபவர் அர்ச்சுனன், 50. கடந்த 13ம் தேதி வயல்வெளியில் நடந்து சென்றபோது, பாம்பு ஒன்று கடித்து விட்டது. சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement