பகுதி நேர ரேஷன் கடை
கும்மிடிப்பூண்டி--புதுகும்மிடிப்பூண்டி அருகே உள்ளது முத்துரெட்டிகண்டிகை கிராமம். அந்த கிராமத்தில், 180 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.அங்கிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுபுழல்பேட்டை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இதனால், முத்துரெட்டிகண்டிகை கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, அவர்கள் பகுதியில், ஒரு பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!