மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம்
அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலக மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., சம்மந்தம் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு தீர்மானங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், ஷாகின் அர்ஷத், கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!