பெரியார் சிலை சேதம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்-விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதமானதை கண்டித்து நகர அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் காமராஜர் வீதியில் இருந்த தந்தை பெரியார் சிலை நேற்று முன்தினம் இரவு லாரி மோதி சேதமாகியது. இதனை கண்டித்தும் டிரைவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் காமராஜர் வீதியருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, இணைச் செயலாளர் ஜனாகிராமன், ஜெ., பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் செந்தில், கலைசெல்வன், நகர ஜெ., பேரவை தலைவர் கோல்டு சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பெரியாருக்கு மீண்டும் அதே இடத்தில் அ.தி.மு.க., சார்பில் சிலையை வைக்க அனுமதி வழங்கக் கோரி, டவுன் போலீசாரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!