அவிநாசி:'கோவில் புனரமைப்பில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஹிந்து அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.அவிநாசி வட்டம், ராமநாதபுரம் கிராமம், நரியம்பள்ளி புதுாரில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம், கடந்த, 2009ல் இருந்து மின்வாரியத்தினரின் பயன்பாட்டில் இருந்துள்ளது.கடந்த, 2013ல் அந்நிலத்தை மின்வாரியத்தினர் விலைக்கு வாங்கி, துணை மின்நிலையம் அமைத்தனர். இதற்காக, ஒரு கோடியே 51 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாய், காசோலையாக, கோவில் அறங்காவலரிடம், மின்வாரியம் சார்பில் வழங்கப்பட்டு, நிலம் கிரயம் செய்யப்பட்டுள்ளது.இந்த தொகை, கோவில் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வட்டியாக பெறப்படுகிறது. இருப்பினும் அங்குள்ள கோவில் பராமரிப்பின்றி, புதர் சூழ்ந்து காணப்படுகிறது என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத நிர்வாகத்தை கண்டித்து, கருவலுாரில், அனுமன் சேனா சார்பில், பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அனுமன் சேனா மாநில பொது செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.தேசிய நிறுவன தலைவர் ஸ்ரீதர், செய்தி தொடர்பாளர் பத்மஜா, பொது செயலாளர் சுரேஷ், மாநில இளைஞரணி செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங் கெடுத்தனர்.
கோவில் புனரமைக்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!