ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவிநாசி ரோட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அவ்வழியாக, சந்தேகப்படும் விதமாக டூவீலரில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். வாகனத்தில், நான்கு மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. சுற்று வட்டாரத்தில், அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு விற்று வருவது தெரியவந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 900 கிலோ அரிசி உட்பட, ஆயிரத்து, 100 கிலோ அரிசி, டூவீலரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, அவிநாசி, மங்கலம் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார், 47 என்பவரை கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!