இரு மகளுடன் தாய் மாயம்
இரு மகளுடன் தாய் மாயம்குண்டடம், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பிரியா, 36. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பல்லடம் தொட்டம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில், இரு மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரியா, இரு மகளுடன் வெளியே சென்றார். பின் வீடு திரும்பவில்லை. மூவரையும் பெற்றோர் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பல்லடம் போலீசார் இரு மகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!