வாயில் பிளாஸ்டர் ஒட்டி வாலிபரிடம் டூவீலர் பறிப்பு
திருப்பூர்:ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அரவிந்த், 18. திருப்பூர், சாமளாபுரத்தில் தங்கி, பல்லடம் செம்மிபாளையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, டூவீலரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.பெத்தாபூச்சிபாளையம், அய்யன் நகர் அருகில் சென்ற போது, திடீரென, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த கட்டையால் அரவிந்தை தாக்கினர்.அவரை காட்டுப்பகுதிக்கு துாக்கி சென்று, கையை கட்டி, வாயில் 'பிளாஸ்டர்' ஒட்டி, பணம் கேட்டு மிரட்டினர். அரவிந்திடம் இருந்த மொபைல் போன் மற்றும் டூவீலரை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அங்கிருந்து தப்பிய அவர் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!