கோவை:கொத்தமல்லி கட்டில் பார்த்தீனிய செடி கலந்து விற்பனைக்கு வருவதால், இல்லத்தரசிகள் உஷாராக இருப்பது அவசியம்.
உணவுப்பொருட்களின் சுவை, மணத்தை உயர்த்திக் கொடுக்கும் வல்லமை கொண்டது கொத்தமல்லி. ரசம், குழம்பு, சாம்பார், வெரைட்டி சாதம் என உணவுப் பண்டம் எதுவாகினும் தன் இருப்பைக் காட்டி, உண்பவர்களை அசத்தி விடும் தன்மை, கொத்தமல்லிக்கு உண்டு. அதன் மருத்துவ குணங்களும் ஏராளம்.இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கொத்தமல்லி கட்டுகளில், வியாபாரிகள் சிலர் பார்த்தீனிய களைச்செடிகளையும் கலந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
போத்தனுார் செட்டிபாளையம் ரோடு, ஸ்ரீராம் நகர் கடையில் கொத்தமல்லி கட்டு வாங்கிய திருமூர்த்தி, வீட்டில் சென்று பார்த்தபோது, பார்த்தீனிய செடி இருப்பதை கண்டார்.உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரரை எச்சரிக்கை செய்து, வேறு யாருக்கும் அதை விற்பனை செய்யாமல் இருக்கவும் முயற்சி எடுத்தார்.பூக்கள் இல்லாவிட்டால், பார்த்தீனிய செடியும் பார்ப்பதற்கு கொத்தமல்லி போலவே இருக்கும். நன்கு கவனித்தால் மட்டுமே வித்தியாசம் புரியும்.எனவே, கொத்தமல்லி விற்பனை செய்யும் கடைக்காரர்கள், வாங்கிச் செல்லும் குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள் கவனத்துடன் இருப்பது நல்லது.இந்த விவகாரத்தில், உழவர் சந்தைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள், உணவு கலப்பட தடுப்பு துறையினரும் தங்கள் பொறுப்புணர்ந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
உணவுப்பொருட்களின் சுவை, மணத்தை உயர்த்திக் கொடுக்கும் வல்லமை கொண்டது கொத்தமல்லி. ரசம், குழம்பு, சாம்பார், வெரைட்டி சாதம் என உணவுப் பண்டம் எதுவாகினும் தன் இருப்பைக் காட்டி, உண்பவர்களை அசத்தி விடும் தன்மை, கொத்தமல்லிக்கு உண்டு. அதன் மருத்துவ குணங்களும் ஏராளம்.இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கொத்தமல்லி கட்டுகளில், வியாபாரிகள் சிலர் பார்த்தீனிய களைச்செடிகளையும் கலந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
கேள்விப்படாத பெயராக உள்ளது . இதனால் என்ன தீங்கு என்பதை சொல்லவில்லையே.