dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனையில் பெண் உதவியாளர் கொலை

Share
புதுக்கோட்டை:புதுக்கோட்டை, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெண், நாகரத்தினம், 65. திருமணம் ஆகாத இவர், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில், தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஓய்வு அறையில் துாங்கிய இவர், நேற்று காலையில், தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.நாகரத்தினம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement