தி.மு.க., பெண் சேர்மன் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை:கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா, அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை தின்று, கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.,வை சேர்ந்த மாலா, 48. இவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து உள்ளது. மேலும், தி.மு.க., நிர்வாகிகளும் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.இதனால், கறம்பக்குடி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இது குறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்சித் தலைமைக்கும் மாலா புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று மாலை, ஒன்றிய தலைவர் மாலா, கலெக்டர் கவிதா ராமுவை சந்திப்பதற்காக, அவரது அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக மாடிப்படிகளில் ஏறியபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அவரை மீட்டு விசாரித்த போது, அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை தின்று, கையில் துாக்க மாத்திரைகளை கொண்டு வந்திருந்ததும் தெரிந்தது. அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!