dinamalar telegram
Advertisement

ஸ்ரீஹரிகோட்டா சென்ற செயற்கைக்கோள் பாகம்

Share
வேலுார்:செயற்கைக்கோள் பாகங்கள் ஏற்றிய ராட்சத லாரி, வேலுார் வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராணுவ ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்படும் செயற்கைக் கோள் பாகங்கள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கு வாகனங்களில் அடிக்கடி எடுத்துச் செல்லப்படும்.இதன்படி, செயற்கைக் கோளுக்கான பாகங்கள் ஏற்றிய ராட்சத லாரி ஒன்று பெங்களூரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது. இந்த லாரி, வேலுார் வழியாக சென்றது. இதை ஏராளமான மக்கள் பார்த்தனர்.
லாரியின் முன்னும், பின்னும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் கார்களில் சென்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், லாரி 10 கி.மீ., வேகத்தில் சென்றது.சில இடங்களில் மின் கம்பங்கள் அருகில் இருந்ததால் எதிர் திசையில் சென்றது. இதற்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 'இந்த லாரி இன்று மாலைக்குள் ஸ்ரீஹரிகோட்டா சென்றடையும்' என, போலீசார் கூறினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement