dinamalar telegram
Advertisement

60 குழந்தைகளுக்கு கொரோனா

Share
நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 60 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மூன்றாவது அலை பரவல் தொடங்கியது முதல் குமரி மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 500 ஆக இருந்தது. ஆனால் நேற்று 1187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 5944 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டதில் 583 ஆண்கள், 603 பெண்கள், 60 குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் தினமும் 200 முதல் 300 பேருக்கு தொற்று உறுதியாகிறது. 60 போலீசார், 34 தீயணைப்பு வீரர்கள், 26 வங்கி ஊழியர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement