dinamalar telegram
Advertisement

கொரோனா பரவல் 2 தெருக்கள் மூடல்

Share
வேலுார்:கொரோனா பரவலால், காட்பாடியில் இரண்டு தெருக்கள் மூடப்பட்டன.வேலுார் மாவட்டத்தில், இன்று 337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காட்பாடி காந்திநகர் 10 வது குறுக்கு தெரு, 22 வது கிழக்கு தெரு ஆகிய பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டது.அந்த தெருக்களில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம், அவர்களுக்கு தேவையான பொருட்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் என ஒலிபெருக்கியில் அதிகாரிகள் கூறினர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement