dinamalar telegram
Advertisement

வேலூர் வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்ற செயற்கைகோள் பாகம்

Share
வேலுார் : வேலுார் வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு செயற்கைகோள் பாகங்கள் ஏற்றிச் சென்ற ராட்சத லாரி பாதுகாப்புடன் சென்றது.


கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கை கோள் பாகங்கள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கட் ஏவுதளத்திற்கு வாகனங்கள் மூலம் அடிக்கடி எடுத்துச் செல்லப்படும். அதன்படி செயற்கை கோளுக்கான பாகங்களை ஏற்றிக் கொண்டு ராட்சத லாரி ஒன்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டது. இந்த லாரி இன்று வேலுார் வழியாக சென்றது. அதை ஏராளமான மக்கள் பார்த்தனர்.


இந்த லாரிக்கு முன்னும், பின்னும் தொழில் நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் கார்களில் சென்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்ற லாரி, 10 கி.மீ., வேகத்தில் சென்றது. சில இடங்களில் மின் கம்பங்கள் அருகில் இருந்ததால் எதிர் திசையில் சென்றது.
இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த லாரி 21ம் தேதி மாலைக்குள் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்றடையும் என போலீசார் கூறினர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement