கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டம் கண்காணிப்பு
குடியாத்தம் : குடியாத்தம் அருகே, கேமரா பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், குப்பம், வனப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுழைந்தது. துருகம், கல்லப்பாடி, மோர்த்தானா பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை கொன்று தின்று வருகிறது. ஏராளமான ஆடுகளை சிறுத்தைகள் துாக்கிச் சென்றதால், மக்கள் அச்சமடைந்தனர். குடியாத்தம் வனத்துறையினர், கால்தடத்தை ஆய்வு செய்து நடமாட்டத்தை கண்காணித்த போதிலும் சிறுத்தைகளை பிடிக்க முடியவில்லை.
எனவே, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கேமராக்களை இன்று பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

வாசகர் கருத்து (3)
உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார்ன்னு ஏதாவது காலி மனையில் எழுதி வையுங்க... இடத்தை அபகரிக்க ஒரு வாரம் பத்து நாளுக்குள் அங்கு சிறுத்தை வரும்... பிடிச்சுடலாம்...
இதுக்கு எதற்கு கேமரா? எங்கு நாடக காதல், கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிசம், பொறுக்கித்தனம், வன்முறை போன்ற சமூக சீர்கேடுகள் இருக்கிறதோ அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும்....
இதே போன்று டாஸ்மாக் கடைகளிலும் வைத்து பிடித்தால் பல லட்சம் கோடி கைப்பற்றலாம், ஆங்காங்கே வைத்தால் சமூக விரோதிகளை பிடிக்கலாம், மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள், மக்கள் காட்டு விலங்குகளால் இறப்பதை விட? ஆகவே இது முக்கியமாக தீய சக்திகள் நடமாடும் இடத்துக்கு மிக முக்கியம், முடிவு வேறாக இருக்கும், தீய சக்திகள் தகுந்த சாட்சி இல்லை, மேலும் இது நான் இல்லை என்று கூறி சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருவார், எதிர்மறை கருத்து பதிவு செய்யக்கூடாது என்றாலும் நாட்டு நடப்பு உண்மையில் கூற விழைகிறது, வந்தே மாதரம்