புதுக்கோட்டை:அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில், தமிழக முதல்வரின் சிறப்பு பரிசு பெற்ற காளைக்கு, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே, கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 57. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், ஆடு, மாடு, வான்கோழி, வாத்து, புறா, குதிரை ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இது தவிர, 25க்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகிறார்.
கடந்த ஆண்டு, விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில், இவர் வளர்த்த காளை, முதல் பரிசை தட்டிச் சென்றது. இதையடுத்து, பரிசாக, 'புல்லட்' வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய அதே காளை, நீண்ட நேரம் களத்தில் நின்று, மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, முதல்வரின் சிறப்பு பரிசான, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வழங்கப் பட்டது. ஜல்லிக்கட்டில் கார் பரிசு வென்று, சொந்த ஊர் திரும்பிய காளையை, கிராம மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே, கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 57. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், ஆடு, மாடு, வான்கோழி, வாத்து, புறா, குதிரை ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இது தவிர, 25க்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகிறார்.
இதையடுத்து, முதல்வரின் சிறப்பு பரிசான, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வழங்கப் பட்டது. ஜல்லிக்கட்டில் கார் பரிசு வென்று, சொந்த ஊர் திரும்பிய காளையை, கிராம மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!