dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி

Share
திருச்சி: திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வேடிக்கை பார்க்கச் சென்ற வாலிபர், மாடு முட்டி இறந்தார்.

திருவெறும்பூர் அருகே, நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதில், 510 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும், அனுமதிக்கப்பட்டனர். போட்டியை காண வந்த வண்ணாங்கோவிலை சேர்ந்த வினோத்குமார்,24, மாடு முட்டியதில் பலியானார்; மேலும் 32 பேர் காயமடைந்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement