dinamalar telegram
Advertisement

கோவிட்டால் இறந்தவருக்கு தடுப்பூசி சான்றிதழ்; குடும்பத்தினர் அதிர்ச்சி

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கோவிட் காரணமாக உயிரிழந்தவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா(72). கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், கடந்த ஆண்டு மே 20ம் தேதி கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று(ஜன.,18) ராஜப்பா பயன்படுத்திய மொபைல்போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோவிட்டால் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த பெண் எஸ்தர் கைது செய்யவில்லையா?

  • Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா

    லஞ்சம் தலை விரித்து ஆடுவதால்தான் இதுபோன்ற தவறுகள் ஏட்படுகின்றன. கோவிட் கூட தடுப்பூசி போட்டு பரவலை தடுத்து விடுவார்கள் விஞ்ஞானிகள். ஆனால் இந்த பாழாப்போன லஞ்சத்த தடுக்க முடியவில்லையே. லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லையே இந்த விஞ்ஞானிகளால்.

  • அப்புசாமி -

    பரலோகத்தில் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாம். அதான் போட்டாங்க போலிருக்கு.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதென்ன பிரமாதம்? இன்னும் பூஸ்டர் ஊசி போட்டதாகத் தகவல் வரும், பொங்கல் தொகுப்பு பரிசு வாங்கியதாக தகவல் வரும், அடுத்து வரும் தேர்தலில் ஓட்டளித்ததாக தகவல் வரும்.

  • தீதும் நன்றும் பிறர் தர வாரா - Perth,ஆஸ்திரேலியா

    ஹா ஹா, அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பு..

Advertisement