குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
புதுக்கோட்டை:திருநாளுர் பகுதியில், மாயமான இரண்டு சிறுவர்கள், வீட்டின் முன் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, திருநாளுர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பூரசுந்தரேஸ்வரபாண்டி,30. இவர், மனைவி சுந்தரி, 26 மற்றும் மகன்கள் நித்தீஸ்,6; வித்தீஸ்,4. நேற்று முன்தினம், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும், மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து, அறந்தாங்கி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன சிறுவர்கள் இருவரும், வீட்டின் முன் உள்ள குளத்தில் இறந்து கிடந்தனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!