dinamalar telegram
Advertisement

வயிற்று போக்கால் 6 வயது குழந்தை பலி

Share
புதுக்கோட்டை:விராலிமலை அருகே, வாந்தி, வயிற்றுப் போக்கால், 6 வயது குழந்தை உயிரிழந்தது. வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்புடன், எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, அண்ணாநகர் குடியிருப்பு வாசிகளுக்கு, நேற்று, திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக், 32, என்பவரது மகள் மோகனஜோதி என்ற 6 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை கார்த்திக்,32, சிறுமியின் அண்ணன் பாரதி, 7, உள்ளிட்ட எட்டு பேருக்கு, திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement