குடியரசு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்? கிளைடர்கள் பறக்கத் தடை..!
டில்லி: வரும் ஜன., 26ம் தேதி குடியரசு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கிளைடர்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் தலைநகர் டில்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு குடியரசு தினம் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் இந்திய உளவுத்துறை அளித்த தகவல் டில்லி மாநில காவல்துறையை பரபரப்பாகியுள்ளது.
குடியரசு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒவ்வொரு குடியரசு தினத்தன்று எச்சரிக்கை விடுக்கப்படும். அதேபோல தற்போதும் குடியரசு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து டில்லி மாநில காவல்துறை வரும் ஜனவரி 26-ஆம் தேதிவரை மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொழுதுபோக்குக்காக பறக்க விடப்படும் பேரா கிளைடர், பாரா மோட்டர், ஆளில்லாத சிறிய ரக ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், ரிமோட் மூலமாக இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள், சூடான காற்று பலூன்கள் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!