பிரதமரின் டெலிபிராம்ப்டர் சொதப்பியதற்கு ராகுல் கிண்டல் விளக்கம்!
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புது டில்லி: உலக பொருளாதார மன்ற மாநாட்டில் (ஜன., 17) பிரதமர் மோடி பேசும் டெலிபிராம்ப்டர் வேலை செய்யாததால் சில விநாடிகள் மோடி உரையை நிறுத்த வேண்டியதானது. அதற்கு காங்.,ஸ் எம்.பி., ராகுல், 'மோடியின் பொய்களை டெலிபிராம்ப்டர் கூட ஏற்கவில்லை' என கிண்டல் செய்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 5 நாள் மாநாடு டாவோஸ் நகரில் ஆன்லைன் வாயிலாக (ஜன., 17) தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 'இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கோவிட் காலங்களில், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா காப்பாற்றியது.' என குறிப்பிட்டார்.
அவரது உரையின் மத்தியில் டெலிபிராம்ப்டர் சில நிமிடங்கள் நின்று போனது. இதனால் அவரால் எடுத்து வந்த குறிப்புகளை கையாள முடியவில்லை. நடுவே உரையை நிறுத்திப் பின்னர் தொடங்கினார். இக்காட்சிகள் சமூக வலைதளங்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சியினரால் பரப்பப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள ராகுல், டெலிபிராம்ப்டரால் கூட பொய்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கிண்டல் செய்துள்ளார். அக்கருத்தை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.

அவரது உரையின் மத்தியில் டெலிபிராம்ப்டர் சில நிமிடங்கள் நின்று போனது. இதனால் அவரால் எடுத்து வந்த குறிப்புகளை கையாள முடியவில்லை. நடுவே உரையை நிறுத்திப் பின்னர் தொடங்கினார். இக்காட்சிகள் சமூக வலைதளங்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சியினரால் பரப்பப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

வாசகர் கருத்து (26)
இதன் மூலம் தெரிவது பின்னணியில் பப்பு அண்ட் ( மூளை ப சி) கம்பெனி யிருப்பாதாக தெரிகிறது.
இவரு அடிக்கடி வெளிநாடு ஓடுகிறர் எந்த ஊர் என சொன்னது உண்டா ஏன் செல்கிறார் என காங்கிரஸ் சோம்பு தூக்குபவர் சொல்வேறாரா
உன்னை உன் கட்சிக்காரனே மதிக்க மாட்டேன்கிறான்... அவனுக்கே தெரியுது.. நீ எவ்வளவு பெரிய டுபாக்கூர் என்று... உன் அம்மா தான் விடாப்பிடியாக பதவியை பிடித்து கொண்டு உள்ளார்.... உன் குடும்பத்தை கட்சிக்கு வெளியே அனுப்பி விட்டு யாராவது ஒருவர் கட்சி தலைவர் ஆனால்.... இந்தியாவுக்கு நல்ல எதிர்கட்சி கிடைக்கும்... இல்லை கான் கிராஸ் கதி அதோ கதி தான்... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் வந்து சேரும்
இவன்தான் ஒரு உருப்படி இல்லாதவன் என்பது தெரிந்ததே
இதுநாள்வரை அதாவது காங்கிராட்ஸ்(காங்கிரஸ்)ஆட்சியில் இருந்தவரை பொய்யுரைகளையே பரப்பிவந்த டெலிபிரண்டர் இப்பொழுது உண்மைகளை மட்டுமே பேசக்கேட்பதால் தான் குழம்பிவிட்டது என்பதை ராகுல் புரிந்து கொள்ளவில்லை