dinamalar telegram
Advertisement

ரூ.61 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

Share
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் இம்மாதத்தின், 15 நாட்களில் மட்டும், 61 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின. தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், இம்மாதத்தின், 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 134 விவசாயிகள், 277 குவியல்களாக, 10 ஆயிரத்து, 268 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 300 முதல், 736 ரூபாய் வரை சராசரியாக, 594 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 61 லட்சத்து, 689 ரூபாய். கடந்த, 15 நாளில் நடந்த இந்த பட்டுக்கூடு ஏலத்தால், 91 ஆயிரத்து, 512 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement