dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனையில் புதைக்கப்பட்ட பெண் சிசு

Share
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புதைக்கப்பட்ட பெண் சிசு குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு, தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மாநிலத்தில் அதிகளவில் பிரசவம் நடக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தர்மபுரியும் ஒன்று. நேற்று காலை, பிரசவ வார்டுக்கு பின் புதைத்திருந்த, 24 வார பெண் சிசுவின் உடலை, நாய் ஒன்று கவ்வி சென்றதை, அங்கிருந்தோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., நாராயணன் புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார், சிசுவின் உடலை மீட்டு, சிசுவை புதைத்தவர்கள் குறித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement